எனக்கு பிடித்த பழைய பாடல்.. – பொன் ஒன்று கண்டேன்

படம் : படித்தால் மட்டும் போதுமா
பாடல் துவக்கம் : பொன் ஒன்று கண்டேன் …
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமுர்த்தி
பாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன
பாடியவர் : P.B.ஸ்ரீனிவாஸ் ,T.M.சௌந்தரராஜன்

பாடல்

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை,
ஏனென்று நான் சொல்லலாகுமா,
ஏனென்று நான் சொல்லவேண்டுமா …
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை,
ஏனென்று நான் சொல்லலாகுமா,
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா …

நடமாடும் மேகம் நவனாகரீகம் ,
அலங்கார கிண்ணம் அலை போல மின்னும் …
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்,
பழங்கால சின்னம் உயிராக மின்னும் …
துள்ளி வரும் வெள்ளி நிலா,
துள்ளி வரும் வெள்ளி நிலா …
துவண்டு விழும் கொடி இடையாள் ,
விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண் அல்லவோ …
சென்றேன் ஹ்ம்ம்ம் ,
கண்டேன் ஹ்ம்ம்ம் ,
வந்தேன் …

(பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை )

நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை ,
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை …
உன் பார்வை போலே என் பார்வை இல்லை ,
நான் கண்ட கட்சி நீ காண வில்லை …
என் விழியில் நீ இருந்தாய் …
உன் வடிவில் நான் இருந்தேன் …
நீ இன்றி நான் இல்லை ,
நான் இன்றி நீ இல்லையே …

(பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை )

Advertisements

எனக்கு பிடித்த பாடல் – பெண்ணல்ல பெண்ணல்ல …

படம் : உழவன்
பாடல் துவக்கம் : பெண்ணல்ல  பெண்ணல்ல  ஊதா பூ …
இசையமைப்பாளர் : A.R.ரஹ்மான்
பாடியவர் : S.P.பாலசுப்ரமனியம்

பாடல்

பெண்ணல்ல  பெண்ணல்ல  ஊதா  பூ ,
சிவந்த  கண்ணங்கள் ரோசாப்பூ,
கண்ணல்ல  கண்ணல்ல  அல்லி  பூ ,
சிரிப்பு  மல்லிகை  பூ ….
(பெண்ணல்ல  பெண்ணல்ல …)

சிறு  கைவளை  கொஞ்சிடும்  கொய்யா பூ ,
அவள்  கைவிரல்  ஒவ்வொன்றும்  பன்னீர்  பூ ,
மை  விழி  ஜாடைகள்  முல்லை  பூ ,
மணக்கும்  சந்தன  பூ ,
சித்திர  மேனி  தாழம்  பூ ,
சேலை  அணியும்  ஜாதி  பூ ,
சிற்றிடை  மீது  வாழை  பூ ,
ஜொலிக்கும்  ஷென்பக  பூ …

(பெண்ணல்ல  பெண்ணல்ல …)

தென்றலை  போல  நடப்பவள் ,
என்னை  தழுவ  காத்து  கிடப்பவள் ,
செந்தமிழ்  நாட்டு  திருமகள் ,
எந்தன்  தாய்க்கு  வாய்த்த  மருமகள் ,
சிந்தையில்  தாவும்  பூங்கிளி ,
அவள்  சொல்லிடும்  வார்த்தை  தேன்துளி ,
அஞ்சுகம்  போல  இருப்பவள் ,
கொட்டும்  அருவி  போல  சிரிப்பவள் ,
மெல்லிய  தாமரை  காலெடுத்து ,
நடையை பழகும்  பூன்தேறு ,
மேட்டியை  காலில்  நான்  மாட்ட  மயங்கும்  பூங்கொடி …

(பெண்ணல்ல  பெண்ணல்ல …)

சித்திரை  மாத  நிலவொளி ,
அவள்  சில்லென  தீண்டும்  பனி  துளி ,
கொஞ்சிடும்  பாத  கொலுசுகள் ,
அவை  கொட்டிடும்  காதல்  முரசுகள் ,
பழத்தை  போல  இருப்பவள் ,
வெல்ல  பாகை போல  இனிப்பவல் ,
சின்ன  மை  விழி  மெல்ல  திறப்பவல் ,
அதில்  மன்மத  ராகம்  படிப்பவள் ,
உச்சியில்  வாசனை  பூ  முடித்து ,
உலவும்  அழகு  பூந்தோட்டம் ,
மெத்தையில்  நானும்  சீராட்ட  பிறந்த  மோகனம் …

(பெண்ணல்ல  பெண்ணல்ல …)

எனக்கு பிடித்த பழைய பாடல்…..

படம் : அன்னை
பாடல் துவக்கம் : புத்தி உள்ள மனிதரெல்லாம்….
இசையமைப்பாளர் : R. சுதர்சனம்
பாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன்
பாடியவர் : சந்திரபாபு

பாடல்:

புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை,
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை… புத்திசாலி இல்லை…
புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை,
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை… புத்திசாலி இல்லை…

பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை,
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை,
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்,
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்……..
புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை,
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை…புத்திசாலி இல்லை…

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை,
காதல் கொண்ட அனைவருமே மணம்  முடிப்பதில்லை,
மணம்  முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை,
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை…
புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை,
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை…புத்திசாலி இல்லை…

கனவு காணும் மனிதனுக்கு நினைபதெல்லாம் கனவு,
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு,
அவன் கனவில் அவள் வருவாள் அவளை பார்த்து சிரிப்பான்,
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்…
புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை,
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை…புத்திசாலி இல்லை…

ஆதி

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

வண்ணங்களின் பண்டிகையான இன்று , என் வண்ணமிகு எண்ணங்களை , தாய் மொழியான தமிழ் மொழியில் பொறிக்க எண்ணி, இந்த வலைப்பதிவை (blog) துவக்கியுள்ளேன்… தங்கள் வாழ்த்துக்களுடன்…

என்றும் அன்புடன்,
செந்தில் குமார்.சி.

Newer entries »