மாரி மழை பெய்யாதோ …

படம் : உழவன் (1993)
பாடல் துவக்கம் : மாரி  மழை  பெய்யாதோ …
இசையமைப்பாளர் : A.R.ரஹ்மான்
பாடியவர் :சித்ரா, ஷஹுல் ஹமீது

கவள தண்ணி …
இறக்கு  மச்சான் …
ஏற  பூட்டி …
உழுது  வச்சான் …
வித்து  நெல்ல  எடுத்து  வச்சான்
விதைக்க நாளும்  காத்திருந்தான்

மாரி  மழை  பெய்யாதோ …
மக்கள்  பஞ்சம்  தீராதோ

மாரி  மழை  பெய்யாதோ
மக்கள்  பஞ்சம்  தீர
சாரல்  மழை  பெய்யாதோ
சனங்க  பஞ்சம்  மாற
மயில்கள்  ஆடும்  கொண்டாட்டம்  போடும்
வானம்  கருக்கலையே
குயில்கள்  நாளும்  தெம்மாங்கு  பாடும்
சோலைதான்  இங்கில்லையே
(மாரி  மழை …)

சட்டியில  மாக்கரச்சு
சந்தியில  கோலமிட்டு
கோலம்  அழியும்  வரை
கோடை  மழை  பெய்யாதோ
மானத்து  ராசாவே
மழை  விரும்பும்  புண்ணியரே
சன்னல்  ஒழுவாதோ
சாரல்  மழை  பெய்யாதோ

வடக்கே  மழை  பெய்ய
வரும்  கிழக்கே  வெள்ளம்
கொளத்தாங்  கரையிலே  அயிரை  துள்ளும்
கிழக்கே  மழை  பெய்ய

கிணறெல்லாம்  புது  வெள்ளம்
பச்சை  வயக்காடு  நெஞ்சை  கிள்ளும்
நல்ல  நெல்லு  கதிரறுத்து
புள்ள  நெளி  நெலியா  கட்டு  கட்டி
அவ  கட்டு  கட்டி  போகையிலே
நின்னு  கண்ணடிப்பான்  அத்தை  மகன்
உழவன்  சிரிக்கணும்  உலகம்  செழிக்கனும்
மின்னல்  இங்கு  பட   படக்க
(மாரி  மழை …)

வரப்புல  பொண்ணிருக்கு
பொண்ணு  கையில்  கிளி  இருக்கு
கிளி  இருக்கும்  கையா  நீ  எப்போ  புடிப்பா

வெதைஎல்லாம் செடியாகி
செடியெல்லாம்  காயாகி
காய  வித்து  உன்  கையா  புடிப்பேன்

புது  தண்டட்டி  போட்ட  புள்ள
சும்மா  தலதலன்னு  வளந்த  புள்ள

ராத்தவலையெல்லாம் குலவை  இட
நான்  தாமரை   உன்  மடி   மேல

கனவுகள்   பலிக்கணும்
கழனியும்  செழிக்கனும்
வானம்  கரு  கருக்க
(மாரி  மழை …)

1 பின்னூட்டம் »

 1. M.NATARAJAN Said:

  NEENGA THAMILA NESIKIRATHALA
  SOLLERENGA…

  NEENGA ENGIRUNTHALUM.

  ETHE RASANAIYODA AYUL MULUKKA MUDI ERUKKANU.

  GOD BLESS U.


{ RSS feed for comments on this post} · { TrackBack URI }

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: