இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 2010

Iniya Chiththirai Thirunaal Vaazhthukkal

இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் …

உலகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் ,
ஏன், தமிழை விரும்புவருக்கும் ,
தமிழைக்கண்டு வியப்பவருக்கும்,
எல்லோருக்கும் , என் உளம் கனிந்த
இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…

இந்த இனிய நாளில், திருக்கணித பஞ்சங்கத்தின்படி புது வருடமாம் “விக்ருதி ” வருடம் பிறந்திருக்கின்றது.. இந்த வருடமும் அனைவருக்கும் அனைத்து நலங்களும் வளங்களும் கிடைத்திட வாழ்த்துகின்றேன்..

சங்கீத சுவரங்கள் …

படம் : அழகன் (1991)
பாடல் துவக்கம் : சங்கீத  சுவரங்கள் …
இசையமைப்பாளர் : மரகதமணி
பாடியவர் : பாலசுப்பிரமணியம் SP, சந்த்யா
பாடலாசிரியர்:  புலமைபித்தன்

சங்கீத  சுவரங்கள்
ஏழே  கணக்கா
இன்னும்  இருக்கா
என்னவோ  மயக்கம்

என்  வீட்டில்  இரவு
அங்கே  இரவா
இல்ல  பகலா
எனக்கும்  மயக்கம்

நெஞ்சில்  என்னவோ   நினைச்சேன்
நானும்தான்  நினைச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசனை  வரல
தூங்கினா  விளங்கும்
தூக்கம்தான்  வரல
பாடுறேன்  மெதுவா  உறங்கு

(சங்கீத  சுவரங்கள் …)

எந்தெந்த  இடங்கள்
தொட்டால்  சுவரங்கள்
துள்ளும்  சுகங்கள்
கொஞ்சம்  நீ  சொல்லித்தா

சொர்க்கத்தில்  இருந்து
யாரோ  எழுதும்
காதல்  கடிதம்
இன்றுதான்  வந்தது

சொர்க்கம்  மண்ணிலே  பிறக்க
நாயகன்  ஒருவன்
நாயகி  ஒருத்தி
தேன்  மழை  பொழிய
பூவுடல்  நனைய
காமனின்  சபையில்
காதலின்  சுவையில்
பாடிடும்  கவிதை  சுகம்தான்

(சங்கீத  சுவரங்கள் … )

இரு தவறுகள்!!!!

இரவில் மின்மினியை வின்மீனென நினைத்தது…
வாழ்வில் உன்னை என்னவளென எண்ணியது…

நிலா நீ வானம் காற்று மழை…

படம் : பொக்கிஷம் (2009)
பாடல் துவக்கம் : நிலா  நீ  வானம்  காற்று  மழை…
இசையமைப்பாளர் : சபேஷ்  முரளி
பாடியவர் : விஜய்  யேசுதாஸ், சின்மயி
பாடலாசிரியர்:  யுகபாரதி

(ஆண்)
நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல்

நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல்

தேவதை  அன்னம்  பட்டாம்பூச்சி
கொஞ்சும்  தமிழ்  குழந்தை
சினுங்கள்  சிரிப்பு  முத்தம்
மௌனம்  கனவு  ஏக்கம்
மேகம்  மின்னல்  ஓவியம்
செல்லம்  ப்ரியம்  இம்சை

இதில்  யாவுமே  நீதான்  எனினும்
உயிர்  என்றே  உனை  சொல்வேனே
நான்  உன்னிடம்  உயிர்  நீ  என்னிடம்
நாம்  என்பதே  இனிமேல்  மெய்  சுகம்

நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல்

(பெண்)
அன்புள்ள  மன்னா அன்புள்ள  கணவா
அன்புள்ள  கள்வனே  அன்புள்ள  கண்ணாளனே
அன்புள்ள ஒளியே  அன்புள்ள  தமிழே
அன்புள்ள  செய்யுளே  அன்புள்ள  இலக்கணமே
அன்புள்ள  திருக்குறளே  அன்புள்ள  நற்றினையே
அன்புள்ள  படவா  அன்புள்ள  திருடா
அன்புள்ள  ரசிகா அன்புள்ள  கிருக்கா

அன்புள்ள  திமிரே அன்புள்ள  தவறே
அன்புள்ள  உயிரே  அன்புள்ள  அன்பே
இதில்  யாவுமே  இங்கு  நீதான்  என்றால்
என்னதான் சொல்ல சொல்  நீயே
பேரன்பிலே ஒன்று  நாம்  சேர்ந்திட
வீண் வார்த்தைகள்  இனி  ஏன்  தேடிட

(ஆண்)
நிலா  நீ  வானம்  காற்று  மழை
என்  கவிதை  மூச்சு  இசை
துளி  தேனா மலரா திசை  ஒளி பகல்

(பெண்)
அன்புள்ள  மன்னா அன்புள்ள  கணவா
அன்புள்ள  கள்வனே  அன்புள்ள  கண்ணாளனே

இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…

உலகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் ,
ஏன், தமிழை விரும்புவருக்கும் ,
தமிழைக்கண்டு வியப்பவருக்கும்,
எல்லோருக்கும் , என் உளம் கனிந்த
இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் …

இந்த இனிய நாளில், திருக்கணித பஞ்சங்கத்தின்படி  புது வருடமாம் “விரோதி” வருடம் பிறந்திருக்கின்றது.. இந்த வருடம் அனைவருக்கும் “அன்பு, அமைதி, அரண்” ஆகிய மூன்றும் தடையின்றி கிடைத்திட வாழ்த்துகிறேன்..

மாரி மழை பெய்யாதோ …

படம் : உழவன் (1993)
பாடல் துவக்கம் : மாரி  மழை  பெய்யாதோ …
இசையமைப்பாளர் : A.R.ரஹ்மான்
பாடியவர் :சித்ரா, ஷஹுல் ஹமீது

கவள தண்ணி …
இறக்கு  மச்சான் …
ஏற  பூட்டி …
உழுது  வச்சான் …
வித்து  நெல்ல  எடுத்து  வச்சான்
விதைக்க நாளும்  காத்திருந்தான்

மாரி  மழை  பெய்யாதோ …
மக்கள்  பஞ்சம்  தீராதோ

மாரி  மழை  பெய்யாதோ
மக்கள்  பஞ்சம்  தீர
சாரல்  மழை  பெய்யாதோ
சனங்க  பஞ்சம்  மாற
மயில்கள்  ஆடும்  கொண்டாட்டம்  போடும்
வானம்  கருக்கலையே
குயில்கள்  நாளும்  தெம்மாங்கு  பாடும்
சோலைதான்  இங்கில்லையே
(மாரி  மழை …)

சட்டியில  மாக்கரச்சு
சந்தியில  கோலமிட்டு
கோலம்  அழியும்  வரை
கோடை  மழை  பெய்யாதோ
மானத்து  ராசாவே
மழை  விரும்பும்  புண்ணியரே
சன்னல்  ஒழுவாதோ
சாரல்  மழை  பெய்யாதோ

வடக்கே  மழை  பெய்ய
வரும்  கிழக்கே  வெள்ளம்
கொளத்தாங்  கரையிலே  அயிரை  துள்ளும்
கிழக்கே  மழை  பெய்ய

கிணறெல்லாம்  புது  வெள்ளம்
பச்சை  வயக்காடு  நெஞ்சை  கிள்ளும்
நல்ல  நெல்லு  கதிரறுத்து
புள்ள  நெளி  நெலியா  கட்டு  கட்டி
அவ  கட்டு  கட்டி  போகையிலே
நின்னு  கண்ணடிப்பான்  அத்தை  மகன்
உழவன்  சிரிக்கணும்  உலகம்  செழிக்கனும்
மின்னல்  இங்கு  பட   படக்க
(மாரி  மழை …)

வரப்புல  பொண்ணிருக்கு
பொண்ணு  கையில்  கிளி  இருக்கு
கிளி  இருக்கும்  கையா  நீ  எப்போ  புடிப்பா

வெதைஎல்லாம் செடியாகி
செடியெல்லாம்  காயாகி
காய  வித்து  உன்  கையா  புடிப்பேன்

புது  தண்டட்டி  போட்ட  புள்ள
சும்மா  தலதலன்னு  வளந்த  புள்ள

ராத்தவலையெல்லாம் குலவை  இட
நான்  தாமரை   உன்  மடி   மேல

கனவுகள்   பலிக்கணும்
கழனியும்  செழிக்கனும்
வானம்  கரு  கருக்க
(மாரி  மழை …)

கண்களில் என்ன ஈரமோ

படம் : உழவன் (1993)
பாடல் துவக்கம் : கண்களில்  என்ன  ஈரமோ ? …
இசையமைப்பாளர் : A.R.ரஹ்மான்
பாடியவர் :சித்ரா, S.P.பாலசுப்ரமனியம்

பாடல்

கண்களில்  என்ன  ஈரமோ ?
நெஞ்சினில்  என்ன  பாரமோ ?
கைகளில்  அதை  வாங்கவா ?
ஒரு  தாயை  போல  உன்னை  தாங்கவா ?

(கண்களில்  என்ன  ஈரமோ …)

பெற்றவள்  விட்டு  போகலாம்
அன்னை  பூமியும்  விட்டு  போகுமா ?
தன்னுயிர்  போல  காப்பதில்
தாயும்  நிலவும்  ஒன்றுதான்
இருக்கும்  தாயை  காத்திடு
மயக்கம்  தீர்ந்து  வாழ்ந்திடு
புது  கோலம்  போடு
விழி  வாசலில்  கலக்கம்  ஏனையா ?

(கண்களில்  என்ன  ஈரமோ …)

அம்மம்மா  இன்று  மாறினேன்
அன்புக்கு  நன்றி  கூறினேன்
உள்ளத்தின்  காயம்  ஆறவே
உதவியது  உன்  வார்த்தை  தான்
நிம்மதி  இன்றி  வாடினேன்
நின்றிட  நிழல்  தேடினேன்
திக்கற்று  போன  வேளையில்
தெரிந்தது  என்  பாதைகள்
உனது  பாடல்  கேட்டது
மனதில்  பாலை  வார்த்தது
புயல்  காற்றில்  வாடி  நின்ற  ஓடம்  தான்
கரையை  சேர்ந்தது …

கண்களில்  இல்லை  ஈரமே
நெஞ்சினில்  இல்லை  பாரமே
கைகளில்  அதை  வாங்கினாய்
ஒரு  தாயை  போல  என்னை  தாங்கினாய்

(கண்களில்  இல்லை  ஈரமே …)

உன் பார்வையில் …..

படம் : அம்மன் கோவில் கிழக்காலே
பாடல் துவக்கம் : உன் பார்வையில் ஓராயிரம் …
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடியவர் :சித்ரா, KJ யேசுதாஸ்

பாடல்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அனைக்கிறேன்

(உன் பார்வையில் ….. )

அசைந்து இசைத்தது வலைக்கரம்தான்
இசைந்து இசைத்தது புது சுரம்தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வளம்புரிதான்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்
மனதை மயிளிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து … பிறந்து … பறந்து … தினம் மகிழ…

(உன் பார்வையில் …)

அனைத்து  நனைந்தது  தலையனைதான்
அடுத்த  அடியென்ன  எடுப்பது  நான்
படுக்கை  விரித்து  உனக்கெனத்தான்
இடுப்பை  வளைத்துனை   அனைத்திடத்தான்
நினைக்க  மறந்தாய்  தனித்துப்  பறந்தேன்
நினைக்க  மறந்தாய்  தனித்துப்  பறந்தேன்
மறைத்த  முகத்திரை  திறப்பாயோ
திறந்து  அகத்திரை   இருப்பாயோ
இருந்து  … விருந்து  … இரண்டு  … மனம்  இணைய

(உன் பார்வையில் …)

இதுவரை நினைத்ததில்லை …

இதுவரை நினைத்ததில்லை …

இதுவரை தோன்றியதில்லை …
பூத்துக்குளுங்கும் மலர்களைவிட
சுற்றியிருக்கும் இலைகள் அழகென்று …

இதுவரை புரிந்ததில்லை …
கடற்கரை தென்றலைவிட
ஆளைத்தூக்கும் ஆடிக்காற்று சுகமென்று …

இதுவரை அறிந்ததில்லை …
நிலவொளி நிறைந்திருக்கும் பௌர்ணமியைவிட
நட்சத்திரங்கள் மட்டும் மின்னும் அம்மாவாசை கவர்ச்சியென்று …

இதுவரை கவணித்ததில்லை …
விலையுயர்ந்த வைரத்தைவிட
குழந்தையின் கண்கள் அதிகம் ஜொலிக்குமென்று …

இதுவரை நினைத்ததில்லை …
பொன்போன்ற காலத்தால்
என் கண்ணோட்டத்தை மாற்ற இயலுமென்று …

இதுவரை நினைத்ததில்லை …
பொன்போன்ற காலத்தால்
அவளைப்பற்றிய என் நினைப்பை மாற்ற இயலுமென்று …

எனக்கு பிடித்த பழைய பாடல்… – காலங்களில் அவள் வசந்தம்

படம் : பாவ மன்னிப்பு
பாடல் துவக்கம் : காலங்களில் அவள் வசந்தம் …
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமுர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பாடியவர் : P.B.ஸ்ரீனிவாஸ்

பாடல்

காலங்களில் அவள் வசந்தம் ,
கலைகளிலே அவள் ஓவியம் ,
மாதங்களில் அவள் மார்கழி ,
மலர்களிலே அவள் மல்லிகை …

(காலங்களில் …)

பறவைகளில் அவள் மனிபுறா,
பாடல்களில் அவள் தாலாட்டு ,
கனிகளிலே அவள் மாங்கனி ,
காற்றினிலே அவள் தென்றல் …

(காலங்களில் …)

பால் போல் சிரிப்பதில் பிள்ளை – அவள்
பனி போல் அணைப்பதில் கன்னி ,
கண் போல் வளர்ப்பதில் அன்னை – அவள்
கவிஞன் ஆக்கினால் என்னை …

(காலங்களில் …)

« Older entries