இதுவரை நினைத்ததில்லை …
இதுவரை தோன்றியதில்லை …
பூத்துக்குளுங்கும் மலர்களைவிட
சுற்றியிருக்கும் இலைகள் அழகென்று …
இதுவரை புரிந்ததில்லை …
கடற்கரை தென்றலைவிட
ஆளைத்தூக்கும் ஆடிக்காற்று சுகமென்று …
இதுவரை அறிந்ததில்லை …
நிலவொளி நிறைந்திருக்கும் பௌர்ணமியைவிட
நட்சத்திரங்கள் மட்டும் மின்னும் அம்மாவாசை கவர்ச்சியென்று …
இதுவரை கவணித்ததில்லை …
விலையுயர்ந்த வைரத்தைவிட
குழந்தையின் கண்கள் அதிகம் ஜொலிக்குமென்று …
இதுவரை நினைத்ததில்லை …
பொன்போன்ற காலத்தால்
என் கண்ணோட்டத்தை மாற்ற இயலுமென்று …
இதுவரை நினைத்ததில்லை …
பொன்போன்ற காலத்தால்
அவளைப்பற்றிய என் நினைப்பை மாற்ற இயலுமென்று …
kapilashiwaa கூறியது:
on செப்டம்பர் 8, 2009 at 2:52 பிற்பகல்
கவிதை ரொம்ப நல்லா இருக்கு. பணி தொடற வாழ்த்துக்கள்.
http://kapilashiwaa.wordpress.com
redthil கூறியது:
on செப்டம்பர் 8, 2009 at 7:14 பிற்பகல்
மிக்க நன்றி … உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி .. உங்களுக்கும் வாழ்த்துக்கள் பிரேமலதா…